வியாழன், 8 நவம்பர், 2012

113. இந்தியாவும் இந்தோனேசியாவும்.

இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்குத் தெற்கில் ஆரம்பித்து, ஒவ்வொரு இடமாகக் காண்பித்துக் கொண்டு நாரதர், மாதலிக்கு வர்ணிக்கிறார். அவற்றுள் புஷ்கரம், வருணனது ஏரி (தோபா குளம்), பாதாளம் ஆகியவற்றை வர்ணித்ததை இது வரை பார்த்தோம்.


பாதாளத்தை அடுத்து அவர் ஹிரண்யபுரத்தை வர்ணிக்கிறார். அவரது வர்ணனையின்படி, பாதாளம் வேறு, ஹிரண்யபுரம் வேறு அல்ல.


பாதாளம் என்று சொல்லப்படும் அந்த இடத்தில் ஹிரண்யபுரம் என்னும் தானவ நகரத்தை மய தானவன் மிகவும் கவனமாகவும், திறமையாகவும் உருவாக்கினான் என்கிறார். அங்கு தானவர்கள் வாழ்ந்தார்கள் என்பதை நாரதர் மட்டுமல்ல, மஹாபாரதமும், ராமாயணமும் வேறு வேறு இடங்களில் சொல்கின்றன.

அந்த தானவர்களுக்குள்ளேயே பிரிவுகள் இருந்திருக்கின்றன.

அவை மயன்,

காலகஞ்சர்,

நிவாதகவசர்,

காலகேயர்,

யாதுதானர் என்பன.

இவை பொதுப் பெயர்களாக சொல்லப்பட்டுள்ளன.


இவர்களிலேயே தானவர்கள், (தானுவின் வம்சாவளியினர்).

தைத்தியர்கள் (திதியின் வம்சாவளியினர்)

என இரண்டு வகையினரும் அடக்கம், சில இடங்களில் இரண்டையும் ஒன்றுக்குள் ஒன்று மாற்றியும் சொல்லியுள்ளனர். அதாவது தானவனையே தைத்தியன் என்றும், தைத்தியனைத் தானவன் என்றும் சொல்லியிருக்கின்றனர்.


உதாரணமாக, மஹாபாரதத்தில் காண்டவ வனம் எரிந்த பொழுது, அந்தத் தீயில் சிக்கின மயனை அர்ஜுனன் காப்பாற்றினான் என்று 85 ஆவது கட்டுரையில் கண்டோம். அப்பொழுது மயனைத் தானவன் என்று ஒரு இடத்திலும், திதியின் மகன் என்று இன்னொரு இடத்திலும் கிருஷ்ணன் அழைக்கிறான். இதனால் மயன் என்னும் மக்கள் இனத்தைப் பொறுத்த வரையில் தைத்திய, தானவக் கலப்பு இருந்திருக்கிறது என்று தெரிகிறது.


தானவர்கள், தைத்தியர்கள் ஆகிய இருவருமே அருகருகே வசித்திருக்கின்றனர். ஒருவருக்கொருவர் உறவு பூண்டும் இருக்கின்றனர். இருவரையுமே அசுரர்கள் என்று சொல்லியிருக்கின்றனர். இங்கு நாம் முன்பு சொன்னதை நினைவு படுத்திக் கொள்வோம், திதியும், தானுவும், சகோதரிகள், அதாவது பெண் மரபணு வழியில் சிறிது மாறுபாட்டோடும், ஆனால் ஒரே மூலமான பெண் மரபணு வம்சாவளியிலும் வந்திருக்கின்றனர். இவர்கள் மரபு வம்சாவளியில் வந்தவர்கள் ஒரே இடத்தில் வசித்திருக்கின்றனர். அதில் பாதாளம் என்னும் இடத்திலும் தைத்தியர்களும், அங்கிருந்த ஹிரண்யபுரத்திலும் தானவர்களும் வசித்திருக்கின்றனர்.


தைத்தியர்களில் நாம் அதிகம் அறிந்த பெயர் ஹிரண்யனும், மஹாபலியும் ஆவர். இவர்களுள் மூன்றடி மண் கேட்ட வாமனர் காரணமாக, மஹாபலி பாதாளத்திற்குச் சென்று விட்டான் என்பதே நாம் பொதுவாக அறிந்த கதையாகும்.


தானவர்களுள் நாம் அதிகம் அறிந்த பெயர் மயன் ஆவான். தானவர்களில் ஒருவனான புலோமனது மகளான சசியை இந்திரன் மணக்கிறான். இந்திரன் இருந்தது, பூமியின் வட கோடியில் இருந்த சைபீரியா  என்பதை நினைவில் கொள்வோம்.


மற்றொரு தானவனான விருஷபர்வனது மகளான சர்மிஷ்டையை, யயாதி மணந்தான். அவர்களுக்குப் பிறந்த த்ருஹ்யு என்பவனும் அவனைச் சேர்ந்தவர்களும் ஐரோப்பாவுக்குச் சென்று அங்கு ட்ரூயிட் என்று பெயர் பெற்றார்கள் என்பதை முந்தின கட்டுரைகளில் சொல்லி வந்தோம். இந்தோனேசியாவில் ஆரம்பித்து, சைபீரியா வரையும், ஐரோப்பா வரையும் தானவப் பெண் வழி மரபணுக்கள் சென்றிருக்கின்றன என்பதைக் காட்டும் இரண்டு வழித்தடங்கள் இவை.



  

இந்தப் படத்தில் நடுவில் செல்லும் நீள் கோடு பூமத்திய ரேகை. உயிரினம் தோன்ற ஏதுவான தட்பவெப்ப நிலை இந்தக் கோட்டைச் சுற்றித்தான் அமைய முடியும். அதிலும் அருகில் நீர் ஆதாரங்கள் இருந்தால்தான் உயிரினங்கள் அதிகம் பெருக முடியும். ஆழ்கடல் அமைப்புகளை வைத்துப் பார்க்கும் போது, இந்தோனேசியப் பகுதியில் உயிரினம் வளர சாதகமான சூழ்நிலை இருந்திருக்கிறது. இந்தப் படத்தில் எண் 1,2 ஆகியவை, தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப மக்கள் இடப்பெயர்வு வடக்குக்கும், தெற்குக்கும் சென்ற வழித்தடமாகும். இதையே முந்தின கட்டுரையில், இந்திரனும், ஐராவதமும் தெற்கிலிருந்து பர்மா, சீனா வழியாக வடக்குக்குச் சென்ற பாதை என்றோம். எண் 1 என்பது இன்றைய சைபீரியா, அன்றைய உத்த்ர குருவாகும்.


எண் 2 பகுதியிலிருந்து தென் கடல் முழுவதும், எங்கெல்லாம் தீவுகள், நிலங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் மக்கள் வசித்திருக்கின்றனர். அப்படி வசித்த இடமே தென்னன் தேசமான 49 நாடுகள். அதை 3 என்னும் எண்ணால் குறித்துள்ளோம்.


25,000 ஆண்டுகளுக்கு முன் வடக்கில் பனியுகம் தீவிரமாக இருந்த்து. அப்பொழுது இந்தியப் பெருங்கடலில் 120 முதல் 150 மீட்டர் வரை கடல் மட்டம் குறைந்திருந்து. அதற்குப் பிறகு 12,000 ஆண்டுகளுக்கு முன் பனியுகம் முடிந்து, கடல் மட்டம் ஏறினபோது, இந்தியாவுக்கு மக்கள் இடம் பெயர்ந்திருக்கின்றனர். முந்தின படத்தில் எண் 4 பகுதியில் ஆரியவர்த்தம் என்று இருந்திருக்கின்றனர்.

இந்த மக்கள் இடம் பெயர்ந்த மக்களாக இருக்கவே, இவர்கள் முன்பு இருந்த தென் கடல் தென்னன் பகுதியும் சுந்தாலாந்தும், முந்தின ஆரிய வர்த்தமாக இருக்க வேண்டும். இதற்குச் சான்றாக என்றோ நடந்தது என்று சொல்லப்படும் புராணப்பெயர்கள் எல்லாம் சுந்தாலாந்து பகுதியில் தான் நடந்திருக்கின்றன. சுந்தாலாந்து என்ற பெயரே, சுந்தா என்னும் பெயரே சுந்தா, உபசுந்தா என்னும் புராண கால அசுரர்களை முன்னிட்டுத்தான் எழுந்திருக்கிறது.


தீபாவளியை ஆரியப் பண்டிகை என்று திராவிடவாதிகள் முத்திரை குத்துகிறார்களே, அதைக் கொண்டாடக் காரணமான நரகாசுர வதத்தில் வரும் நரகாசுரன் சுந்தாலாந்து பகுதியில் வாழ்ந்து வந்தான்.


இதைச் சொல்வதற்கு ஆதாரம், தைத்தியர்கள் யார் என்று பார்த்தால் ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபு, பிரஹல்லாதன், விரோசன்ன், பலி, நரகன், நமூசி, அகஸ்தியர் கதையில் வரும் வாதாபி, இல்வலன், திலோத்தமை கதையில் வரும் சுந்தா, உபசுந்தா, கும்பா, நிகும்பா, ரைவதன் ஆகியவர்களெல்லாம் தைத்தியர்களே. இவர்களில் பலியைப் பற்றிச் சொல்லும் விவரங்களில் பாதாளம் என்னும் வருவதால், அந்தப் பாதாளம் இருந்த இந்தோனேசியப் பகுதியில் தான் இந்த்த் தைத்திய அசுரர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.


அங்கிருந்த அசுர்ரகளுடன் இந்திரன் என்னும் வடபுல மக்கள் அடிக்கடி சண்டையிட்டிருக்கின்றனர். அசுரர்களை அழிக்க இந்திரன் தென் புலம் வரும்போது அசுரப் பகுதிக்கு அருகாமையில் இருந்த வசதியான தங்கும் பகுதி பூம்புகார்!


அவனது தென் திசைப் போர்ப் பயணத்தின் போது பூம்புகார் வழியாகத்தான் சுந்தாலாந்து சென்றிருக்கிறான். மேலே கொடுத்த படத்தில் இருப்பது போல சீனா, பர்மா வழியாக வந்தால் அவனுக்குப் பாதுகாப்பு இல்லை. அது சுந்தாலாந்துடன் நேரடித் தொடர்பு கொண்ட நிலவழித் தடம். அதனால் அவன் இமய மலையைச் சுற்றிக் கொண்டு இந்தியாவில் நுழைந்து, பூம்புகார் வழியாக, சுந்தாலாந்து சென்றிருக்கிறான். பூம்புகாரது பாதுகாப்புக்காக நாளங்காடி பூதத்தை நிறுவியிருக்கிறான். பதிலுக்கு முற்கால சோழ அரசனான முசுகுந்த அரசனது உதவியைப் பெற்றிருக்கிறான் என்று சொல்லும் சிலப்பதிகாரச் சான்றுகளை முன்பே 11,12,13, 52 ஆவது கட்டுரைகளில் பார்த்தோம்.



இந்தப் படத்தில் ரஷ்யா பகுதியில் உள்ள பைகால் ஏரிப் பகுதியே வைகாசன ஏரி என்றும், உத்த்ரகுருப் பகுதி என்றும் 35 ஆவது கட்டுரையில் பார்த்தோம். அந்தப் பகுதியிலிருந்து நேர் தெற்காக சுந்தாலாந்துக்கு வரலாம். அப்படித்தான் மக்கள் இடப்பெயர்வு நடந்திருக்கிறது (கட்டுரையின் போக்கில் அத்ற்கான ஆதாரங்களைக் காண்போம்.) ஆனால் இந்திரன் இமயமலையைச் சுற்றிக்கொண்டோ அல்லது நேபாளத்துக்கு அருகில் உள்ள கைலாச மலை வழியாகவோ தென்னிந்தியாவில் உள்ள பூம்புகாருக்கு வந்திருக்கிறான்.


கைலாச மலையைச் சொல்வதற்குக் காரணம், அங்குதான் இந்திரனது நண்பனான உபரிசர வஸு வாழ்ந்து வந்தான். இந்த மன்னன் சோழர் வம்சத்தில் வருபவன் என்பதைத் திருவாலங்காடுச் செப்பேடுகளில் காண்கிறோம்.  (10. 11 ஆவது கட்டுரைகள்). போரில் வெற்றி பெற வெற்றிக் கொடி ஏந்தும் வழக்கத்தை இந்திரன்தான் துவக்கி வைத்தான். அவனிடமிருந்து அவனது கொடியை உபரிசரவஸு பெற்றுக் கொள்கிறான். (பிருஹத் சம்ஹிதை), அதற்குப் பிறகே பாரத நாட்டின் எல்லா மன்னர்களும் கொடி ஏந்தும் வழக்கத்தைப் பின்பற்றலாயினர். கோவில்களில் கொடி ஏற்றும் வழக்கம் இதையொட்டியே ஏற்பட்டது.


உபரிசரவஸு இருந்த வட சேடியிலிருந்துதான், வித்தியாதர ஜோடி ஒன்று பூம்புகாரில் நடைபெற்ற இந்திர விழாவைக் காண வந்தது. (10 ஆவது கட்டுரை). இந்திரனுக்கும் பூம்புகாருக்கும், சோழனுக்கும் உள்ள தொடர்பால் பூம்புகாரில் இந்திர விழா எடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. இந்திரனது போர்ப் பயணங்களில் முக்கியமான தண்டு இறக்கும் இடமாகப் பூம்புகார் இருந்திருக்கிறது. 11,500 வருடங்களுக்கு முன்பே அங்கு கட்ட்ட அமைப்பு இருந்த்து என்பதையும், அது இன்று கடலில் மூழ்கி விட்டது என்பதையும் 16 ஆவது கட்டுரையில் கண்டோம்.

 

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது இந்தியா (தென்னிந்தியா) சுந்தாலாந்து, மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல மனித இனக் கலப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று தெரிகிறது. திதியின் வழிவந்தவர்கள், தானுவின் வழி வந்தவர்கள் என்னும் அசுரர்கள் மட்டுமல்ல, அதிதியின் வழிவந்தவர்களான மனிதர்களும் இந்தப் பகுதிகளில் இருந்திருக்கிறார்கள். தென்னன் பாண்டியன் மானவன் தான். அசுரனான தைத்தியனோ, தானவனோ அல்லன்.


இவர்கள் மட்டுமல்ல, கருப்பு நிறத்தவ்ரான ராக்ஷசர்களும் இருந்திருக்கின்றனர். ராவணன் ராக்ஷசனாவான். அவன் புலஸ்தியர் என்னும் பிராம்மணரது பேரனாகப் பிறந்தாலும், அவனது தாய் தைத்தியப் பெண்ணான கைகேசி ஆவாள். ராவணனைப் பற்றிய ராமாயண வர்ணனைகளால் அவன் பெருத்த சரீரமும், கருத்த சரீரமும் கொண்டவன். அப்படி இருப்பவர்கள் ஆப்பிரிக்க மக்களே. அந்த இனக் கலப்பு அவன் தாய் வழியில் வந்திருக்க்கூடும். மேலும், நாம் சொல்லும் சுந்தாலாந்து அருகே பூமத்திய ரேகைப் பகுதியில் ஸ்யாம மலை என்று ஒரு மலை இருந்த்து என்றும் அங்கு வாழ்ந்த மக்கள் கருத்த நிறத்தவராக இருந்தனர் என்றும் 58 ஆவது கட்டுரையில் கண்டோம். ஸ்யாமா என்றாலே கருப்பு என்று பொருள். எனவே அந்தப் பகுதியுடன் தொடர்புடைய மக்களில் வந்தவர்களாக இருக்கவேதான் ராவணனும் கருப்பு, கிருஷ்ணனும் கருப்பு.


ராவணன் இலங்கையில் தங்கி விட்டான். அதே பகுதியைச் சேர்ந்த மக்க்ளாக திராவிடேஸ்வரனான மனு அரபிக் கடல் வழியாக சரஸ்வதி நதிப் பகுதியில் நுழைந்தான். அவனது வம்சாவளியில் ஆண் பரபரையான இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த ராமனும் கருப்பு. பெண் வழிப்பரம்பரையில் புரூரவஸ், யயாதி, யது என்னும் பரம்பரையில் (சந்திர வம்சம்) வந்த கிருஷ்ணனும் கருப்பு. (கிருஷ்ணன் என்னும் பெயருக்குக் கருப்பு என்று பொருள். அவன் கருப்பு நிறமாதலால் ஸ்யாமளன் என்றும் அழைப்பார்கள்). தென்கடலிலிருந்து வந்த பாண்டியனும் கருப்பு.


இவ்வாறு தைத்திய, தானவ, மானிட, ராக்ஷச மக்கள் அருகருகே வாழ்ந்தும், இனக் கலப்பு செய்தும் இருந்த பகுதி தென்னிந்தியக் கடல், சுந்தாலாந்து பகுதிகள். இவற்றில் பெரும் பகுதிகள் இன்று கடலுக்குள் முழுகி விட்டன. மீதம் இருக்குமிடம் தமிழ் நாட்டின் தென் கிழக்குக் கடலோரப் பகுதிகளே. அந்தப் பகுதியில் இருக்கும் தூத்துக்குடியில் உள்ள ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களது பல், கபால அமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்த பொழுது அவை இன்றைய தமிழ் மக்களது அமைப்பை ஒத்திருக்கவில்லை என்று தெரிய வந்தது.



சடலங்கள் கிடைத்துள்ள ஆதிச்சநல்லூர்ப் பகுதியைப் படத்தில் காணலாம்.


இன்றைக்கு 4500 (பொ.மு 2500) ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்க்கூடிய அவர்களில் 4 விதமான அமைப்புகள் இருந்திருக்கின்றன. காகசீயர், மங்கோலியர், நீக்ரோ என்னும் கருப்பினத்தவர், ஆஸ்திரேலியர் என்னும் நான்கு விதமான மக்களும் அவர்களில் இருந்திருக்கின்றனர்.

(விவரம் இங்கே:-Tamilnadu – Home for Negroids, Australoids Caucasoids, Mongoloids..)

 

இது நாம் மேலே சொல்லி வந்த கலப்படக் குடியிருப்புகளை ஊர்ஜிதப்படுத்துகிறது. அவர்களின் அதிக பட்ச எல்லை தமிழ் நாட்டின் தென்கிழக்குக் கடலோரப் பகுதிகள்.


இன்றைக்கு இந்தியாவில் இந்த நான்கு வித முகங்களுமே இருக்கின்றன என்பதற்கு இதுவே காரணத்தைக் காட்டுகிறது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது, இவை எல்லாமே தென் கடலிலிருந்து வந்தவர்களே. ஐரோப்பாவிலிருந்து அல்ல.


இதுவரை நாம் சொல்லி வந்துள்ள சுந்தாலாந்தை மையமாகக் கொண்டு எழுந்த மக்கள் பெருக்கத்துக்கு மரபணு ஆராய்ச்சிகளும் ஒத்துப் போகின்றன. மனித இனத்தின் ஆரம்ப கண்டுபிடுப்புகளான மண்ணைக் கொண்டு செய்யும் பானை, கல்லாலான அமைப்புகள், தங்கம் போன்ற உலோகங்களாலான பொருட்கள், விவசாயம் போன்றவை இந்த்த் தென் கிழக்கு ஆசியாவில் தான் தென்படுகின்றன. இதைப் பற்றி ஆராய்ந்த ஸ்டீஃபன் ஓப்பன்ஹீமர் (STEPHEN OPPENHEIMER ) இது வரை கண்டுபிடிக்கப்பட்ட பழமையான பானை, ஜப்பானில் கிடைத்துள்ளது என்கிறார். அதன் காலம் இன்றைக்கு 12,500 ஆண்டுகளுக்கு முன்.

தானியத்தை அரைந்த்து மாவாக்கும் கல் இயந்திரங்கள் 30,000 ஆண்களுக்கு முன்பே சாலமன் தீவுகளில் இருந்திருக்கின்றன என்றும் ஆதாரத்தைக் காட்டுகிறார்.


இந்தப் படத்தில் சாலமன் தீவுகள் ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்கில் காணலாம். இந்திய நூல்களில் யமகோடி என்று சொல்லுமிடம் இந்தப் பகுதியில்தான் உள்ளது என்று முந்தின கட்டுரையில் கண்டோம்.

 


 

சாலமன் தீவுகளை ஒட்டியுள்ள நியூ கினியாவில் 9000 ஆண்டுகளுக்கு முன்பே சதுப்பு நிலத்தை, விளைநிலமாக்கி விவசாயம் செய்திருக்கிறார்கள் என்பதற்கும் ஆதாரத்தைக் காட்டுகிறார் ஓப்ப்ன்ஹீமர். கீழுள்ள படத்தில்  நியூ கினியாவை சிவப்பு நிறத்தில் காணலாம்.


 

இவை எல்லாம் சுந்தாலாந்தின் தொடர்ச்சியே. 25,000 ஆண்டுகளுக்கு முன் தொடர்நிலப் பகுதிகளாக இருந்தவையே. ('Out of Eden - The Peopling of the World'
by Professor
Stephen Oppenheimer )


அவர் காட்டும் ஆதாரங்கள் நம் புராண, இதிஹாசக் கதைகளுடன் ஒத்துப் போகின்றன. அவற்றில் வரும் ஒவ்வொரு கதைக்கும், மரபணு, சரித்திரம், புவியியல் அமைப்பு மற்றும் நிகழ்வுகள் என பல தொடர்புகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட தொடர்பில்தான் எங்கோ ஐரோப்பாவில் பரவிய ட்ரூயிட் என்னும் தானவர்கள் இந்தியா வழியாகவும், இந்திய மக்களுடன் கலந்தும் சென்றாலும், அவர்களது ஆதி இருப்பிடம் சுந்தாலாந்தில் செல்கிறது என்பதை ஆணித்தரமாகச் சொல்ல முடிகிறது. அவற்றை மேற்கொண்டு காண்போம்.

 

 

 

 

5 கருத்துகள்:

  1. "மேலே கொடுத்த படத்தில் இருப்பது போல சீனா, பர்மா வழியாக வந்தால் அவனுக்குப் பாதுகாப்பு இல்லை."

    I would like to know whether it is possible for a person on those days to travel from present Russia to Indonesia to wage war that to traveling through the land mass.

    பதிலளிநீக்கு
  2. I ask you some questions to just for clarification. I appreciate your effort in writing an article getting quotes from different old literature and writing in Tamil font. How you are doing this?
    Are you using Google transliteration or do you have special software for Tamil fonts?

    பதிலளிநீக்கு
  3. //I would like to know whether it is possible for a person on those days to travel from present Russia to Indonesia to wage war that to traveling through the land mass.//

    Yes not possible. But gradual shifting of mankind due to changing climatic condition has taken place in Indonesia - Siberia sector. One such incident from puranic narration will be written in 116th article. All that happened before Holocene -i.e, 30,000 years BP. Genetic study by Oppenheimer also shows that route. After Holocene, the shift has happened from South Seas and South east Asia towards India and Europe via NW India and Persian Gulf.

    On Indra's fight, they must have had some airborne vehicles (vaimanika sastra) for travel. The Vidhyadara couple from Vadachedi also could have used airborne vehicle to come to Pumpukar. Vidhyadaras normally travel by air. It is unbelievable, but presence of vaimanika sastra shows the probability.

    பதிலளிநீக்கு
  4. //How you are doing this?//
    Its tough. I am thinking on this topic for 24 hours a day. I sleep for 5 hrs and try to grab time for the series as I find more connections as I write. When I get to do other works in between, I lose track of the thought-flow and have to start once again, that is why there are long gaps in between articles.

    //Are you using Google transliteration or do you have special software for Tamil fonts?//

    I use NHM writer. I suggest that readers download it in their systems and can type in Tamil at any place.

    பதிலளிநீக்கு