ஞாயிறு, 19 டிசம்பர், 2010

21. இந்திரனும், இந்திரியங்களும்.




இயற்கையில் பொருள்கள் மூன்று பரிமாணங்களில் உள்ளன. அவற்றை திட, திரவ, வாயு என்று அறிகிறோம். மனிதனுக்கும் இந்த முப்பரிமாணம் உண்டு. நமது உடல் திட வஸ்து என்றால், ரத்தம், சுரப்பிகளில் உண்டாகும் நீர் போன்றவை திரவங்கள் ஆகும். காண இயலாத நம் மனது, எண்ணம் போன்றவை வாயுவினால் ஆனவை எனலாம். 


இந்த முப்பரிமணம் எல்லாவற்றிலும் இருக்கிறது. உலக அளவில் இந்தப் பூமி, அந்தரிக்‌ஷம் எனப்படும் வாயு மண்டலம், கிரகங்கள் இருக்கும் ஆகாயம் என்று மூன்று பரிமணங்களை வேதம் சொல்கிறது. தேவேந்திரனான இந்திரனுக்கும் இப்படிப்பட்ட முப்பரிமாணம் உள்ளது.


இதந்திரன்என்று சொல்லப்படும் தெய்வ ரூபத்தில் இந்திரன் இருப்பது ஒரு பரிமாணம். தெய்வக் கரு, திசைக் கரு என்று சம்பாபதித் தெய்வம் சொல்லும் திசைத் தெய்வமாகவும் இந்திரன் கருதப்படுகிறான். கிழக்குத் திசைக்கான கடவுள் இந்திரன்.. கிழக்கு என்றால் உதயம், முன்னோடி என்றெல்லாம் சொல்லலாம். முன்னோக்கி அழைத்துச் செல்லும் தெய்வமாக இந்திரன் கருதபப்டுகிறான். இந்திரனை முன்னிடுத்தான் பிற தெய்வங்கள் வருகின்றன. அதனால் வருடத்தின் முதல் விழா இந்திரனுக்கு நடந்தது.  


அடுத்த பரிமாணம், கண்ணுக்குத் தெரியாத, ஆனால் உணரக்கூடிய சக்தியாக இந்திரன் இருப்பது. இடியிலும், மின்னலிலும், இருப்பவன் எவனோ, அவனது அந்த சக்தியைக் கொண்டே இன்று உலகத்தில் பல இயக்கங்கள் நடக்கின்றன. மொத்தம் 14 இந்திரன்கள் ஒரு கல்பத்தில் வருகிறார்கள். ஒவ்வொரு மன்வந்திரத்துக்கும் ஒரு இந்திரன் ஆட்சிப் பொறுப்பு ஏற்கிறான் என்று புராணங்கள் கூறுகின்றன. மன்வந்திரம் என்பது, குறிப்பிட்ட அமைப்புகளைக் கொண்ட மனித வர்கத்தைக் கொண்டுவரும். அந்த அமைப்புகளது உருவகமாக அல்லது அச்சாக அந்த மன்வந்திரத்தின் இந்திரன் அமைவான்.



இப்பொழுது நமக்கு 7- ஆவது மன்வந்திரம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் இந்திரன் இடி என்னும் வஜ்ராயுதம் தாங்கினவன். அது மின்னியக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்று சென்ற பகுதியில் பார்த்தோம். அந்த மின் சக்தியே மனிதனது இயக்கத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மனிதனது சிந்தனை, செயல் எல்லாவற்றையும் நுண்ணிய மின் செய்திகள் மூலம் மனித மூளை இயக்குகிறது என்பதை அறிவியல் மெய்ப்பித்துள்ளது.


இந்த இரண்டாவது பரிமாணாத்தைப் பற்றி உபநிஷத்துக்கள் வாயிலாக நாம் இன்னும் சில விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.


இந்த மன்வந்திரத்தின் மக்களை மூன்று விதமாக்ப் பிரிக்கலாம். அவை தேவன், மனிதன், அசுரன் என்பதே. தேவர்கள் உலகத்தை விட்டு வேறு எங்கோ இல்லை. மனிதனே, தேவனாகவும், அசுரனாகவும் இருக்கிறான். அவனே மனிதத்தனத்துடனும் இருக்கிறான். இது பற்றி பிருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு விளக்கம் வருகிறது. (5-2- 1,2,3)



தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் இவர்களுக்குத் தந்தை பிரஜாபதி ஆவார். (பிரஜைகளை உண்டாக்குபவர்) இவர்கள் ஒருமுறை, பிரஜாபதியிடம் சென்று தங்களுக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கேட்டார்கள். அவர், தேவர்களிடம் ‘என்று கூறி, ‘என்ன சொல்கிறேன் என்று தெரிகிறதா என்று கேட்டார். அவர்கள். தெரிகிறது. ‘தாம்யதஎன்கிறீர்கள். அதாவது ‘அடக்கமாக இருங்கள்என்கிறீர்கள் என்றனர். அது சரியே என்றார் பிரஜாபதி.
தேவர்களிடம் பல நல்ல குணங்கள் இருந்தாலும், புலனடக்கம் கொள்வது சிரமம். மேலும், புலன்களை அடக்கியவன் தான் தேவனாவான். அவர்களுக்கு எது முக்கியமோ, எது சிரமமோ அதுவே உபதேசமானது.


மனிதர்களிடம், ‘என்பதைத் தன் உபதேசமாகக் கூறினார் பிரஜாபதி. அதை ‘தத்தஎன்று மனிதர்கள் புரிந்து கொண்டார்கள். தத்த என்றால் ‘தானம் செய்தல்என்று பொருள். ஒரு பொருளை மற்றவர்களுக்கு எடுத்துக் கொடுக்க மனிதனுக்கு மனம் வராது. வள்ளல் தன்மை அவனுக்குக் கடினமானது. அதனால் எவன் தானப்பிரபுவாக இருக்கிறானோ அவனை மனிதர்களுள் உயர்ந்தவன் என்கிறார்கள். தமிழ் மரபில் ஏழு வள்ளல்கள் இருப்பதை இங்கு நினைவு கூறலாம். 


அசுரர்களிடம், ‘என்ற உபதேசத்தையே தந்தார் பிரஜாபதி. அவர்கள் அதைதயத்வம்என்று புரிந்து கொண்டார்கள். தயை தாட்சண்யம் காண்பிப்பது அசுரனுக்குக் கடினமான செயல். மற்றவர்கள் துன்பப்டுவதைப் பார்க்க அவர்களுக்கு இன்பமாக இருக்கும். அதனால் கருணை என்பதைத் தனது உபதேசமாகப் பிரஜாபதி அசுரர்களுக்குத் தந்தார்.



இவைதான் தேவ, மனித, அசுரர்களுக்கான இலக்கணம். இவர்கள் மூவருமே மனித உருவில் உள்ளவர்கள்தான். ஆனால் குறிப்பிட்ட குணம் ஒன்றைத் தூக்கலாக உடையவர்கள். திருமணப் பொருத்தம் பார்க்கும் பத்துப் பொருத்தங்களுள் கணப்பொருத்தம் என்று உண்டு. தேவ, மனித, அசுர (ரா‌ஷஸ) என்னும் மூன்றும் மூன்று கணங்கள் ஆகும். 27 நட்சத்திரங்களும் இந்த மூன்று கணங்களுக்குள் வருகின்றன. அவரவர் பிறந்த நட்சத்திரத்தை வைத்து என்ன கணம் என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. ஆனால் மேலே சொல்லப்பட்ட குணத்தைக் கொண்டே ஒருவரது கணத்தைத் தெரிந்துக் கொள்ளலாம்.


அசுரர்களும் மனிதர்களாகப் பிறந்தவர்கள்தான். ஆனால் மற்றவர்களுக்குத் தொந்திரவு கொடுக்கும் குரூர குணம் 
அவர்களுக்கு இருக்கும். மற்றவர்கள் படும் துன்பத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அதனால் இரக்க குணம் இல்லாதவர்கள் அசுரர்கள் அல்லது ராக்ஷஸர்கள் எனப்பட்டனர்.


இவ்வாறு மூன்று வித “தஎன்னும் உபதேசமே ‘தெய்வ வாக்குஎன்கிறார் யஞ்யவாக்கியர் என்னும் ரிஷி. இந்த தெய்வ வாக்கைத்தான் மேகம் இடிக்கும் போது ‘த-த-தஎன்று திருப்பித் திருப்பிச் சொல்கிறது என்கிறார்.


இதந்திரன் என்னும் பரமாத்மாவான இந்திரன், தன் வஜ்ராயுததால் த-த-த- என்று இடி ஒசை எழுப்பும் போதெல்லாம், நம் குணம் என்ன என்று நம்மைத் தட்டி எழுப்பிக் கேட்கிறது. இடி ஒசையைக் கேட்கும் போதெல்லாம் நாம் நம்மைச் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.  இதுவே உபதேசம்.


ஒருவன் சந்நியாசம் வாங்கி கொள்ளும்போது ஒரு தண்டத்தைக் கையில் ஏந்துகிறான். இது இந்திரனுடைய வஜ்ராயுதம் போன்றது என்று ஆருண்யோபநிஷத்து கூறுகிறது. மூன்றுவித மக்களை வாட்டும் மூன்றுவிதக் குணங்களை அவன் விட வேண்டும் என்பதை நினைவு படுத்தவே சந்நியாசியின் தண்டம் இப்படி உருவகப்படுத்தப்பட்டது. இப்படிபட்ட குண அடிப்படையில் வேதமும், புராண இதிஹாசங்கள் கூறும் எந்தக் கதையையும் புரிந்து கொள்ள வேண்டும்.


தேவர்கள் பலவித நற்பண்புகளை உடையவர்கள். பெயருக்கேற்றாற்போல ஒளி பொருந்தியவர்கள். ந்ல்லதே நினைப்பார்கள், நல்லதே செய்வார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு வீக்னஸ் உண்டு. புலன்களை, அதாவது இந்திரியங்களை அடக்குவதற்கு அவர்கள் பாடுபட வேண்டும். அவர்களுக்குத் தலைவன் இந்திரன். இந்திரன் என்றால் இந்திரியங்களுக்குத் தலைவன் என்பது பொருள். புலன்கள் விஷயத்தில் அவன் தவறு செய்து அவதிப்படுவான். புராணக் கதைகளில் புலனடக்கம் இல்லாமல் இந்திரன் தவறு செய்யும் நிகழ்ச்சிகள் அடிக்கடி வரும். அகலிகையிடம் அவன் தவறாக நடந்து கொண்டது மிகவும் பிரசித்தமானது. அதற்குக் காரணம், தேவனாக இருந்தாலும், புலனடக்கத்தில் தவறி விடுகிறான்.


புலன்கள் என்பதை இந்திரியங்கள் என்கிறோம். இந்திரியங்களை அடக்கினால் அவன் தேவனாவான். புலனை அடக்கி யார் வேண்டுமானாலும் இந்திரப்பதவிக்குப் போட்டியிடலாம். அப்படி இந்திரனுக்கு நிறைய போட்டிகள் இருந்திருக்கின்றன என்று புராணங்கள் மூலம் அறிகிறோம். அதனால் இந்திரியங்களுக்கு அதிபதி எவனோ அவன் இந்திரன், அல்லது தேவேந்திரன் ஆவான் என்று சொல்லப்பட்டது. அதில் தவறும் போது இந்திரன் தன் ‘பதவியைஇழக்கிறான்.



இந்திரனுக்கு நேர்மாறாக இருப்பவன் அசுரன். திசைத் தெய்வ அமைப்பில், இந்திரன் கிழக்கு என்றால், அவனுக்கு நேர் எதிரே மேர்குத் திசையில் அசுரன் இருப்பான். ஆம் அசுரனையும் ஒரு தேவனாக உருவகப்படுத்தி உள்ளார்கள். அவனும் மனிதனைத் தன் பிடியில் வைத்துக் கொள்ளப் பார்ப்பான். அதிபதித்துவம், அதாவது தலைமைப் பண்புடன் மக்களைத்தன் பிடியில் அசுரனாலும் வைத்துக் கொள்ள முடிவதால் அவனுக்கும் தேவன் அல்லது தெய்வம் என்ற அந்தஸ்து கிடைக்கிறது.


இந்திரனைப் போல சூரியனுக்கும் திசை கிழக்கு. அவனுக்கு எதிராக மேற்குத் திசையில் இருப்பவன் வருணன். புராணங்களிலும், உபநிஷத்துக்களிலும் வரும் இந்தத் தத்துவங்கள் அற்புதமாக இருக்கும். தேவன் (சுரன்) அசுரன், சூரியன் வருணன் இவையெல்லாம் இரட்டைகள். ஒன்றில்லாமல் ஒன்று இருக்காது. இவை ஜோடியாக இருக்கும், ஆனால் ஒன்றுக்கொன்று மாறாக இருக்கும்.


இப்படிபட்ட இரட்டைகளை பிராணன் ரயி என்று ப்ரஸ்ன உபநிஷத்து சொல்கிறது. வெய்யிலும் நிழலும் இப்படி ஒரு இரட்டை. அது போல, பகலும் இரவும், வலமும் இடமும், சித்தும் ஜடமும், வடக்கும் தெற்கும், கிழக்கும் மேற்கும், முன்பு யுகக் கணக்கில் பார்த்தோமே ஏறு முகம் இறங்கு முகம் இவை எல்லாமே பிராணன் ரயி என்னும் இரட்டையர் ஆவர். வெவ்வேறாக இருந்தாலும், அவை தொடர்புடயவை.



உதாரணமாக, சூரியன் வெப்பம் உடையவன். அவனது ஜோடியான வருணன் என்றால் நீர் என்று பொருள். நீர் குளிர்ச்சியானது. சூரிய வெப்பத்துக்கு வருணன் எதிர்ப்பதம் ஆகிறான். ஆனால் சூரிய வெப்பம் இருந்தால்தான் நீராவி எழுந்து மேகமாகி மழையாகி நீர் கிடைக்கும். இப்படி ஒரு தொடர்பு இவற்றுக்குள் உண்டு. மற்ற ஜோடிகளிலும் இப்படி ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதைக் காணலாம்.


தேவர் அசுரர்களுக்கும் இப்படி தொடர்பு உண்டு. ஒளி உள்ளவன் ஒருவன். ஒளியை மறைப்பவன் மற்றொருவன். புலன்களை அடக்குபவன் ஒருவன். புலன்களால் அடக்கப்படுபவன் மற்றொருவன். புலனடக்கத்தில் தவறினாலும், தேவன் அதை நைச்சியமாகச் செய்வான். அசுரன் அடாவடியாகச் செய்வான். இந்தத் தொடரில் முன்பு இந்திரன் மகன் நடனமாடிக் கொண்டிருக்கும் ஊர்வசியிடம் மயங்கி, அதன் காரணமாக அகத்தியரிடன் சாபம் பெற்றான் என்று பார்த்தோம். அதே இந்திரன் மகன் ஒரு காகம் உருவம் எடுத்து சீதையைத் தொந்திரவு செய்த போது அசுர குணத்தைக் காட்டினான். சீதையைத் துன்புறுத்தி இன்பம் கணடதன் காரணமாக அவன் அசுரன் காகாசுரன் என்ற பெயரில் குறிக்கப்பட்டான்.


தேவாசுரர்களைப் பற்றிய கதைகளில் எப்பொழுதுமே அசுரர்கள் தேவர்களைச் சீண்டுவார்கள். சூரியனை மறைப்பார்கள், இருளைக் கொடுப்பார்கள், முனிவர்கள் செய்யும் யாகங்களைக் கெடுப்பார்கள், பெண்ணைத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள். தனக்கு ஒன்று கிடைக்கவில்லையானால், யாரால் அது கிடைக்கவில்லையோ, அல்லது யாருக்கு அது கிடைத்து விட்டதோ அவர்களைத் துன்புறுத்துவார்கள். சம்பாபதி தெய்வமும், நாளங்காடிப் பூதமும், புகார் நகரில் குடி கொண்டதற்குக் காரணம், அங்கு அப்படிப்பட்ட மக்களால் அடிக்கடி தொந்திரவு இருந்தது.


திராவிடன் என்று திராவிடவாதிகள் அழைக்கிறார்களே, அந்த ராவணன் அசுரன் என்று அழைக்கப்பட்டான். அவன் தந்தை புலஸ்தியர் என்னும் பிராம்மண ரிஷி. தந்தையைப் பின்பற்றியே ராவணனை பிராம்மணன் என்று சொல்ல வேண்டும். ஆனால் அவன் பிராம்மணன் என்று அறியப்பட்டதை விட அசுரன் (ரா‌ஷஸன்) என்றே அறியப்பட்டான்.  பிரம்ம வித்தை அறிந்த பிராம்மணனாக இருந்தாலும், அவனிடம் இந்த அசுர சுபாவம் குடி கொண்டிருக்கவே, ராவணன் அசுரன் எனப்பட்டான்.


புலன்களுக்கு அடிமைப்படுதல், அதாவது இந்திரியங்களுக்கு வசப்படுதல் என்பது மின்சார சம்பந்தமானது. முந்தின பகுதியில் இந்திரன் என்பவன் இயற்கையில் உள்ள மின்சார சக்தியின் உருவகம் என்று பார்த்தோம். இந்திரியங்களை மின்சார சமிஞ்ஞை மூலமாக நம் மூளையானது இயக்குகிறது. அதனால் நம் இந்திரியங்களுக்கும் இந்திரன் தலைவனாகிறான். 


இந்தப் பரிமாணத்தின் அடிப்படையில் ரிக் வேதத்தில் வரும் ஆரிய- தஸ்யூ சம்பவங்களை ஆராய வேண்டும். வேதங்களை மொழி பெயர்ப்பு மூலம் புரிந்து கொள்ள முடியாது. உபநிஷத்துக்கள் மூலமாகத்தான் வேதக் கருத்துக்களை அறிந்து கொள்ள முடியும் என்பதே காலம் காலமாக இந்த நாட்டில் வழங்கி வரும் வழக்கம். இதுவரை கண்ட உபநிஷத்துக்கள் விளக்கப்படி ஆரிய த்ஸ்யூ போராட்டதை ஆராய்வோம்.


அதன் பிறகு இந்திரனது மூன்றாவது பரிமாணமமான, லௌகீகமாக இந்திரன் என்பவன் வாழ்ந்தான் என்று காட்டும் ஆதாரங்களைக் காண்போம். 



5 கருத்துகள்:

  1. உங்கள் கட்டுரையில் அசுரரும், ராக்‌ஷசர்களும் ஒன்று என்று கூறியிருக்கிறீர்கள். நான் அறிந்தவரை இருவரும் வேறு.அவர்கள் நடத்தைகள் தீயவையாக இருந்தாலும்,அவர்கள் வேறே.ஹிரண்யகசிபு அசுரன்;ஆனால் இராவணன் ராக்‌ஷசன்.ஆண்டாள் திருப்பாவையில்,’புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை’ என்று குறிப்பிடுவது இராவணனையே அன்றி ஹிரண்யனை அல்ல.
    ஸாரனாதன்.

    பதிலளிநீக்கு
  2. ப்ருஹதாரண்யக உபநிஷத்து விவரிக்கும் அந்தப் பகுதியில் தேவ, மனுஷ்ய, அஸூரா என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதில் சொல்லப்படுவது குண வேறுபாடுகள் ஆகும். மனிதர்களிடையே இருக்கும் குண வேறுபாடுகள் அடிப்படையில் தேவ, மனுஷ்ய, அசுர குணம் என்ற வித்தியாசம் வருகிறது.

    இதையே கணப் பொருத்தமாகத் திருமணப் பொருத்தத்தில் சொல்லப்பட்டுள்ளது. அங்கு தேவ கணம், மனுஷ்ய கணம், ராக்ஷஸ கணம் சென்று சொல்லப்படுவதைக் கவனிக்கவும். அதனால் குண வேறுபாடுகளைப் பொறுத்த மட்டில், ராக்ஷசமும், அசுரமும் inter- changeable என்று சொல்லலாம். உபநிஷத் சொல்லும் குண வேறுபாடும், திருமணப் பொருத்தத்தில் வரும் கண வேறுபாடும் ஒத்து இருக்கவே, படிப்பவருக்கு எளிதில் புரியும் என்று கணப்பொருத்தம் பற்றிச் சொல்லும் இடத்தில் அவ்வாறு எழுதினேன்.

    ஆனால் மனிதர்களை வகைப் படுத்தும் போது, அசுரர்கள் வேறு, ராக்ஷசர்கள் வேறு. சுரர்களுக்கு எதிரிடையானவர்கள் அசுரர்கள். பெயர்க் காரணத்தால் அவர்கள் பூமியின் தென்பாகத்தில் உண்டானவர்கள் எனலாம். தானவர்கள், தைத்தியர்கள், மயன் ஆகியோர் அசுரர்கள். இன்றைய ஐரோப்பியரில் பெரும்பாலானவர்கள் அசுர தானவர்களே. உடல் வலிமை அவர்களுக்கு அதிகம்.

    ராக்ஷசர்கள் உருவத்தில் பெரிதாகவும், பார்க்க பயங்கரமாகவும் இருப்பவர்கள். Gigantic figure. ராவணன் அப்படிப்படட் ராக்ஷசனே.

    பதிலளிநீக்கு
  3. நான் தற்சமயம் தமிழ்.ஹிந்துவில் எழுதி வரும் நாவல் வடிவிலான மணிமேகலை காப்பிய உரைநடைக்கு இந்திரன் பற்றி உங்கள் கருத்துகளை எடுத்தாள அனுமதி கிடைக்குமா? உங்கள் வலைப்பதிவின் பெயரைக் குறிப்பிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. @ சத்தியப் பிரியன்

    With due credits you may reproduce the contents. Send me the links of the articles in which you use the contents of my articles. You may give the links in this comment section itself.

    There are ideas related to the topic of Indra and Kaveri in many of my English blogs. Just giving the links of a few for your reading and research.

    (1) Origin of the name ‘Kaaveri” http://jayasreesaranathan.blogspot.in/2008/11/origin-of-name-kaaveri.html

    (2) Tretha yuga in the Cholan inscriptions. The inscriptional evidence on bringing Kaveri is given in this article / link.
    http://jayasreesaranathan.blogspot.in/2008/04/tretha-yuga-in-cholan-inscriptions.html

    (3) Indus girl and Indra loka have remnants in the South West Americas? - The region of Indra discussed in this article.
    http://jayasreesaranathan.blogspot.in/2011/11/indus-girl-and-indra-loka-have-remnants.html

    (4) Why ban Gita when Russia has a Vedic past? - The region of Indra discussed in this artilce.
    http://jayasreesaranathan.blogspot.in/2011/12/why-ban-gita-when-russia-has-vedic-past.html


    பதிலளிநீக்கு